கூகுள் மீட்டில் திருமணம்; சோமாட்டோவில் விருந்து! வித்தியாசமான லாக்டவுன் கல்யாணம்! அசத்தும் ஜோடி.!

கூகுள் மீட்டில் திருமணம்; சோமாட்டோவில் விருந்து! வித்தியாசமான லாக்டவுன் கல்யாணம்! அசத்தும் ஜோடி.!


young-couple-arranged-for-online-marriage

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா மூன்றாவது அலையாக பெருமளவில் பரவி வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கொரோனோ பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். மேலும் சில மாநிலங்களில் திருமண விழாக்களில் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டுமெனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் பிரதாமன் மாவட்டத்தை சேர்ந்த சந்தீபன் மற்றும் அதிதீ தம்பதியினர் ஆன்லைனிலேயே திருமணத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அதாவது இருவருக்கும் திருமணம் ஜனவரி 24ம் தேதி நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. அப்பொழுது  2 கூகுள் மீட் லிங்க் உறவினர்களுக்கு அனுப்பப்பட உள்ளது. அதில் ஒரு லிங்கிற்கு 250 பேர்  என 500 பேர் திருமணத்தை காணவுள்ளனர்.

marriage

மேலும் அவர்களுக்கெல்லாம் விருந்தளிக்கும் வகையில், சோமாட்டோ மூலம் உணவு ஆர்டர் செய்து அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி திருமண ஜோடிகளுக்கு அன்பளிப்பு அளிக்க விரும்புபவர்கள் அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் மூலம் ஆர்டர் செய்து அனுப்பலாம் எனவும், பணம் கொடுக்க எண்ணுபவர்கள் கூகுள் பே, போன் பே மூலம் அனுப்பலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த வித்தியாச திருமணம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.