விடாம துரத்துதே.. பாம்பு கடித்து பலியான வாலிபர்.! இறுதி சடங்கிற்கு வந்த தம்பிக்கும் நேர்ந்த பரிதாபம்.! அதிர்ச்சியில் உறைந்த கிராமத்தினர்.!

விடாம துரத்துதே.. பாம்பு கடித்து பலியான வாலிபர்.! இறுதி சடங்கிற்கு வந்த தம்பிக்கும் நேர்ந்த பரிதாபம்.! அதிர்ச்சியில் உறைந்த கிராமத்தினர்.!


young brother dead bite snake who came for brother funeral

உத்தரபிரதேசம் மாநிலம், பவானிபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் மிஸ்ரா. 38 வயது நிறைந்த அவரை சில தினங்களுக்கு முன்பு பாம்பு ஒன்று கடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அரவிந்த் மிஸ்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் அவருக்கு இறுதி சடங்கு  நடைபெற்றுள்ளது. அதில் கலந்துகொள்வதற்காக அரவிந்த் மிஸ்ராவின் சகோதரர் 22  வயது நிறைந்த கோவிந்த் மிஷாரா என்பவர் வந்துள்ளார். இறுதிச் சடங்கு முடிந்த பிறகு கோவிந்த் மிஸாராவும், சந்திரசேகர் பாண்டே என்பவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்.அப்பொழுது  வீட்டின் அறைக்குள் நுழைந்த ஒரு பாம்பு கோவிந்த் மற்றும் சந்திரசேகர் பாண்டேவை கடித்ததாக கூறப்படுகிறது.

snake

அதனை தொடர்ந்து துடிதுடித்த இருவரையும், உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் கோவிந்த் மிஸாரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சந்திரசேகர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. சகோதரர்கள் இருவர் அடுத்தடுத்தாக பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்கு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதாக கூறப்படுகிறது.