பழங்கால நினைவுச் சின்னங்களை நாளை முதல் 15 ஆம் தேதி வரை இலவசமாக பார்க்கலாம் மத்திய அரசு அறிவிப்பு..!

பழங்கால நினைவுச் சின்னங்களை நாளை முதல் 15 ஆம் தேதி வரை இலவசமாக பார்க்கலாம் மத்திய அரசு அறிவிப்பு..!


You can see the ancient monuments for free from tomorrow till 15th central government announcement..

இந்தியா சுதந்திரம் அடைந்து 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முழுவதும் சிறப்பான கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. 

புதுடெல்லி, இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் சிறப்பான முறையில் நடந்து வருகின்றன. சுதந்திர தினத்தை  முன்னிட்டு பல துறைகள் சலுகைகளை வெளியிட்டு வருகின்றன. 

அந்தவகையில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழங்கால நினைவுச்சின்னங்களை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 15-ஆம் தேதி வரை மக்கள் கட்டணம் இல்லாமல் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இது பற்றி மத்திய கலாசாரத்துறை மந்திரி கிஷண் ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில், சுதந்திர அமுத பெருவிழா மற்றும் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், பகுதிகளை சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் 5-ஆம் தேதி முதல் 15- ஆம் தேதி வரை கட்டணம் இல்லாமல் பார்வையிட அனுமதி வழங்கப்படுகிறது என குறிப்பிட்டு இருந்தார்.