ஆதங்கத்தின் வெளிப்பாடு! 4 வருஷமா வேலை செஞ்சிட்டு திடீர் முடிவு எடுத்த வேலைக்கார பெண்! காரணத்தை கேட்டு மனவேதனையை கொட்டின நபர்!!!
நீண்டகால உறவுகளா முக்கியம், இல்லை அதிக வருமானமா முக்கியம் என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. தனது வீட்டில் 4 ஆண்டுகளாக பணியாற்றிய சமையல் பெண் திடீரென வேலையை விட்டு விலகிய அனுபவத்தை அங்கித் பாண்டே என்பவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவு தற்போது இணையத்தில் பரவலாக கவனம் பெற்றுள்ளது.
4 ஆண்டு பணிக்குப் பிறகு திடீர் முடிவு
அங்கித் பாண்டே கூறியதன்படி, கடந்த 4 ஆண்டுகளாக அவரது வீட்டில் சமையல் வேலை செய்து வந்த பெண் ஒருநாள் வந்து, அடுத்த நாளிலிருந்து வேலைக்கு வர முடியாது என தெரிவித்தாராம். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்ததாக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பெண்ணுக்கு ஆண்டுதோறும் 15 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டதாகவும், மாதம் ரூ.15,500 சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பண்டிகை காலங்களில் போனஸ், பரிசுகள் உள்ளிட்ட பல சலுகைகளும் வழங்கப்பட்டதாக கூறியுள்ளார்.
அதிக சம்பள வாய்ப்பே காரணம்
வேலையை விட்டு விலகுவதற்கான காரணத்தை கேட்டபோது, வேறு இடத்தில் அதிக சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளதாக அந்தப் பெண் தெரிவித்தாராம். அதே அளவு சம்பளத்தை தானும் வழங்கத் தயாராக இருப்பதாக அங்கித் பாண்டே கூறியபோதும், ஏற்கனவே அங்கு அட்வான்ஸ் பெற்றுவிட்டதாகவும், புதிய வேலைக்குச் செல்ல முடிவு செய்துவிட்டதாகவும் அவர் கூறியதாக பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிரித்தபடியே விடைபெற்ற அந்தப் பெண், சில நிமிடங்களில் 4 ஆண்டுகால பணி உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக அங்கித் பாண்டே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இணையத்தில் சூடுபிடித்த விவாதம்
இந்த பதிவு வெளியானதைத் தொடர்ந்து, பணம் மற்றும் மனித உறவுகள் குறித்த விவாதம் சமூக வலைத்தளங்களில் தீவிரமடைந்துள்ளது. பலரும் தங்களது சொந்த அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
ஒரு தரப்பினர், மனிதர்கள் தங்களது எதிர்கால நலனையும் பொருளாதார முன்னேற்றத்தையும் முன்னிலைப்படுத்துவது இயல்பானது என்று கருத்து தெரிவித்துள்ளனர். மறுபுறம், பல ஆண்டுகள் கிடைத்த ஆதரவு மற்றும் நம்பிக்கையை விட சிறிய அளவிலான கூடுதல் வருமானத்திற்காக உறவு முறிவது ஏமாற்றமளிப்பதாக சிலர் பதிவிட்டு வருகின்றனர். இதனால் பணமும் பாசமும் எது முக்கியம் என்ற விவாதம் இணையத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதையும் படிங்க: பணக்காரரை மட்டும் பார்த்து திருமணம் செய்யாதீங்க.... CEO வெளியிட்ட எமோஷனல் பதவி!!!