இந்தியா லைப் ஸ்டைல்

இவ்வளவு பெரிய அம்மியா? உங்க வாழ்க்கையில் இதுவரை பார்த்திருக்கவே மாட்டீங்க.! வைரல் வீடியோ.

Summary:

இவ்வளவு பெரிய அம்மி கல்லா என ஷாக் கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

இவ்வளவு பெரிய அம்மி கல்லா என ஷாக் கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

இயந்திரமயமாகிவிட்ட இந்த உலகில் அனைத்து வேலைகளுக்கும் இயந்திரம் வந்துவிட்டது. இடுப்பு வலிக்க மாவு ஆடின காலம் போய் இப்போ மாவு அரைக்க கிரைண்டர், துணி துவைக்க வாஷிங் மெஷின் இப்படி அனைத்து வேலைகளையும் எளிதாக்கும்வகையில் அனைத்துக்கும் இயந்திரம் வந்துவிட்டது.

அதேபோல் அம்மிக்கல்லில் அரைத்த உணவுகளை சாப்பிட்டபோது மக்களிடம் ஆரோக்கியம் இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் சிறு வயதில்லையே சர்க்கரை வியாதி, இரத்த கொதிப்பு போன்ற நோய்கள் வந்து மக்களை பாடாய்படுத்துகிறது. மேலும் அனைத்து வேலைகளுக்கும் இயந்திரம் வந்துவிட்டதால் பெண்களின் வேலை சற்று எளிதாகிவிடுகிறது.

இதனால் பல பெண்கள் இன்று உடல் எடை கூடி, சிறு சிறு வேலைகளை பார்ப்பதற்கு கூட சிரமப்பட்டுவருகின்றனர். இப்படி உலகமே இயந்திரமயமாகிவிட்டநிலையில் இந்த வீடியோவில் வரும் பெண் ஒருவர் செய்யும் காரியம் சற்று பிரமிப்பை ஏற்பத்தியுள்ளது.

ஆம், சிறிய அளவிலான அம்மிக்கல் கூட தற்போது பயன்பாட்டில் இல்லாதநிலையில் இந்தப்பெண் பெரிய அளவிலான அம்மியைத் தூக்கி அசால்டாக சட்னி அரைக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது.

 


Advertisement