இந்தியா காதல் – உறவுகள்

லண்டனில் கணவன், வீட்டில் ஆளில்லா நேரத்தில் மனைவி செய்த காரியம்!

Summary:

women suicide by dowry problem

ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்தவர் மாருதி. இவர் லண்டனில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் நாகமணி என்பவருக்கும் 
கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. நாகமணி வருவாய்துறை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் நாகமணிக்கு திருமணத்தின்போது ரூ.2 லட்சம் பணமும், ஒரு லட்சம் மதிப்பினாலான தங்க நகைகளும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
ஆனால் திருமணத்திற்கு பின்னரும் மாருதி தன்னுடைய பெற்றோருடன் சேர்ந்து மேலும் வரதட்சணை கேட்டு, நாகமணியை துன்புறுத்தி வந்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து சமீபத்தில் மாருதி மற்றும் அவரது பெற்றோர்கள் , நாகமணியிடம் உன்னுடைய வீட்டிற்கு சென்று உடனடியாக ரூ.7 லட்சம் வாங்கி வா என அவரை அவமானப்படுத்தி துன்புறுத்தியுள்ளார்.
 
இதனால் மனமுடைந்த நாகமணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை கொண்டுள்ளார்.

இந்த நிலையில் நாகமணியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் மாருதியின் குடும்பத்தார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement