இந்த மனசு தான் சார் கடவுள்... திருமண நிகழ்வில் மிதமான உணவை எடுத்து பெண் செய்த நெகிழ்ச்சி செயல்..

இந்த மனசு தான் சார் கடவுள்... திருமண நிகழ்வில் மிதமான உணவை எடுத்து பெண் செய்த நெகிழ்ச்சி செயல்..


Women helps to poor peoples

கொல்கத்தாவில் திருமண விழாவில் மீதமான உணவை எடுத்து சென்று மணமகனின் சகோதரி இரவில் உறங்கி கொண்டிருந்த ஏழைகளுக்கு வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

ராணாகட் ரயில் நிலையம் அருகே உள்ள நடைப்பாதையில் உறங்கி கொண்டிருந்த ஏழை மக்களை எழுப்பி திருமண நிகழ்வில் மீதமிருந்த சாதம்,குழம்பு,சப்பாத்தி ஆகியவற்றை தனது கையால் வழங்கிய பெண்ணின் செயல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

உணவை வீணாகாமல் உடனடியாக எடுத்து சென்று ஏழைகளுக்கு வழங்கிய பெண்ணின் நல்லெண்ணத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.அந்த பெண்ணின் புகைப்படத்தை புகைப்படகாரர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நிலையில் தற்போது அப்புகைப்படம் வைரலாகி வருகிறது.