இந்தியா

கொரோனா வைரஸை குணப்படுத்த புதிய வித்தை! தமிழகத்தையே தலைசுற்ற வைத்த பெண்! தீயாய் பரவும் தகவல்!

Summary:

Women gave idead for cure coronovirus

சீனாவில் ஹுபெய் மாகாணத்தில் உள்ள உஹான் நகரில் உருவாக்கிய கொரனோ வைரஸ் தற்போது அதிவேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த கொரனோ வைரஸ் பாதிப்பினால் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 10000க்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தக் கொடிய வைரஸ் சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, தாய்லாந்து, உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவி வருகிறது. மேலும் தற்போது அந்த பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. இதனால் உலக நாடுகள் முழுவதும் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. மேலும் அந்த வைரஸ் குணம்செய்ய இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

 

இந்நிலையில் கொரோனா வைரஸை சித்த மருத்துவத்தால் குணப்படுத்திவிடலாம் எனவும், ஆனியன் ஊத்தாப்பம் சாப்பிட்டால் வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் எனவும் தமிழகத்தில் பலரும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் முகுந்தி  என்ற யோகா டீச்சர் கொரோனா வைரஸை குணப்படுத்த தன்னிடம் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க யோகா உள்ளது என கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் தனது யோகாசனத்தின் மூலமாக கேன்சர், எய்ட்ஸ் போன்ற பல நோய்களை குணப்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். யோகாவால் தனது டிஎன்ஏவையே மாற்றிக் கொண்டேன் என அனைவரையும் கிறுகிறுக்க வைத்த அவர் தனது சலப்பாசனம் யோகாவை 5 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் கொரோனா வைரஸ் தாக்காது என கூறி, அதனை தனது கணவரை செய்துகாட்டவும் வைத்துள்ளார். மேலும் இதன் ஒரு சிட்டிங்கிற்கு 3000 ரூபாய் எனவும் முகுந்தி கூறியுள்ளார். இவர் கூறியதைக் கேட்ட செய்தியாளர்கள் தலைசுற்றி போயுள்ளனர்.

 


Advertisement