முதலிரவு முடிந்ததும்.. மணப்பெண் செய்த காரியம்.. பேரதிர்ச்சியில் குடும்பம்.!



women cheated 9 men in Maharashtra using marriage

மகாராஷ்டிரா மாநிலத்தில் திருமணம் என்ற பெயரில் 9 ஆண்களை ஏமாற்றிய பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சமீபத்தில் இளைஞர் ஒருவருக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்து சில நாட்களிலேயே மணப்பெண், அந்த குடும்பத்தினரின் முழு நம்பிக்கையையும் பெற்றுள்ளார். 

பின்னர் வீட்டிலிருந்த லட்சக்கணக்கான பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மணமகன் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த பெண் ஏற்கனவே இதே முறையில் 8 பேரை ஏமாற்றியிருப்பதை கண்டுபிடித்துள்ளனர். 

Women

திருமணத்திற்கு பிறகு குடும்பத்தினரின் நம்பிக்கையை பெற்று, பின்னர் பணம் மற்றும் நகைகளுடன் தப்பிச் செல்வதையே அவர் வழக்கமாக செய்து வந்ததாக கூறப்படுகிறது. முதலிரவுக்கு பிறகு புகுந்த வீட்டினர் அந்த பெண்ணை முழுமையாக நம்பி வீட்டுப் பொறுப்புகளை ஒப்படைத்து வந்துள்ளனர். 

இதையும் படிங்க: இரண்டு வருஷ முன் காதல் திருமணம்! அண்ணன் என்று கூறி ஏமாற்றிய மனைவி....கடைசியில் காதல் கணவருக்கு மனைவி கொடுத்த பெரிய ஷாக்!!!

இதை பயன்படுத்திக்கொண்ட அந்த பெண், வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார். ஏற்கனவே 8 குடும்பங்களை ஏமாற்றியிருந்தும், தற்போது 9வது குடும்பத்தையும் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுவரை அந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.