இந்தியா

16 ஆயிரத்துக்கு பாலியல் தொழிலாளியாக சிறுமி விற்பனை.. பதைபதைப்பை ஏற்படுத்திய பகீர் தகவல்..!

Summary:

16 ஆயிரத்துக்கு பாலியல் தொழிலாளியாக சிறுமி விற்பனை.. பதைபதைப்பை ஏற்படுத்திய பகீர் தகவல்..!

16 வயது சிறுமியை ஏமாற்றி, ஒருவரிடம் விபசாரத்திற்கு விற்க முயன்ற பெண் தரகரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள தானே மாவட்டம், மீரா ரோடு பகுதியில் 16 வயதுடைய ஒரு சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண் விபசார தரகரான காஜல் சந்தன், சிறுமியை ஏமாற்றி ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். 

தொடர்ந்து, சிறுமியை அவர் 16000 ரூபாய்க்கு விற்பதற்காக முடிவு செய்து ஒருவரை வர கூறியிருந்தார். அப்போது இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில், அவர்கள் ஆட்டோ ஸ்டாண்ட் அருகாமையில் மாறுவேடத்தில் பெண் தரகரை பிடிப்பதற்காக காத்துக்கொண்டிருந்தனர். 

இந்த நிலையில், பெண் தரகர் 16000 பணத்தை வாங்கிக்கொண்டு, சிறுமியை கை மாற்றும்போது மாறுவேடத்தில் ஒளிந்திருந்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Advertisement