
ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் பக்தர்களை ஆசிரமத்தில் தங்கவைத்து கடவுளின் பிரசாதம் எனக் கூறி கஞ
ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் பக்தர்களை ஆசிரமத்தில் தங்கவைத்து கடவுளின் பிரசாதம் எனக் கூறி கஞ்சா கலந்த இனிப்பை கொடுத்து பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த பாபாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை அடுத்த பங்கரோட்டா பகுதியில் முகுந்த்புரா என்ற ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்திற்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்வது வழக்கம். பாபா சந்நியாசி என்பவரால் தொடங்கப்பட்ட இந்த ஆசிரமம், தற்போது அவரது மகன் யோகேந்திர மேத்தாவால் என்பவரால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாபா சந்நியாசி யோகேந்திர மேத்தா மீது பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கடந்த 25 ஆண்டுகளாக பெண் ஒருவர் தன் குடும்பத்துடன் முகுந்த்புரா ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அந்த பெண்ணுக்கு கடவுளின் பிரசாதம் எனக்கூறி கஞ்சா கலந்த இனிப்புகளை யோகேந்திர மேத்தா கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் அவர் மீது புகார் கொடுத்துள்ளார்.
மேலும், என்னை போல், பல பெண்கள் பாபாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பாபாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement