3 முறை..9 லட்சம் செலவு! இந்தியரை மணந்த கனடா பெண் குமுறல்.! எதற்காக? என்னதான் நடந்தது??



woman-spent-9-lakhs-to-get-marriage-certificate

இந்திய வம்சாளியை சேர்ந்த அனுபிரீத் கவுர் என்ற பெண் கனடாவில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார்.அவர் நவ்ஜத் ரந்திவாலா என்ற இந்தியரை காதலித்து வந்த நிலையில், இவர்களது திருமணம் கடந்த ஆண்டு மத்தியபிரதேசம் குவாலியரில் நடைபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்கள் திருமண சான்றிதழுக்காக குவாலியரில் உள்ள மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

ஆனால் சான்றிதழ் வழங்க கால தாமதமாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரும் கனடாவிற்கு சென்றனர். பின்னர் மீண்டும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்து சான்றிதழை கேட்டுள்ளனர். ஆனால் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் லஞ்சம் கேட்டுள்ளார்.

marriage

இதுகுறித்து அனுபிரீத்
கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக இருந்த அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். அவர் அந்த ஊழியரை எச்சரித்துள்ளார். ஆனாலும் அப்பொழுதும் சான்றிதழ் வழங்கப்படவில்லையாம். இந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக திருமண சான்றிதழ் பெறுவதற்காக அவர்கள் கனடாவில் இருந்து வந்துள்ளனர். இதுகுறித்து அனுபிரீத் திருமண சான்றிதழுக்காக இதுவரை 9 லட்சம் செலவு செய்து கனடாவில் இருந்து மூன்று முறை வந்துள்ளோம்.

ஆனாலும் தற்போது வரை சான்றிதழை வழங்காமல் அதிகாரிகள் காலதாமதம் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த தகவல் பரவிய நிலையில் மாவட்ட ஆட்சியர் இதுக்குறித்து விசாரிக்கப்பட்டு சான்றிதழ் வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.