இந்தியா

பெண் நீதிபதிக்கு 100-க்கும் மேற்பட்ட காண்டம்களை அனுப்பி வைத்த நபர்.! என்ன காரணம் தெரியுமா.?

Summary:

சர்ச்சை தீர்ப்பளித்த பெண் நீதிபதிக்கு 100-க்கும் மேற்பட்ட காண்டம்களை பார்சலில் அனுப்பி வைத்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் பெண் ஒருவர்.

மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வருபவர் பெண் நீதிபதி புஷ்பா கனேதிவாலா. இவர் கடந்த மாதம் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றை விசாரித்தார்.

அப்போது, உடல் ரீதியாக சிறுமியை சில்மிஷம் செய்வது போக்சோ சட்டப்படி குற்றமில்லை என தீர்ப்பளித்தார். அதேபோல் 5 வயது சிறுமி பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட மற்றொரு வழக்கை விசாரித்தபோது சிறுமியின் கையை பிடித்திருப்பது பாலியல் வன்முறை ஆகாது என கூறி குற்றஞ்சாட்டப்பட்ட நபரை விடுவித்தார்.


இந்த தீர்ப்புகளுக்கு பல தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் தேவஸ்ரீ திருவேதி என்ற பெண், சர்ச்சைக்குரிய தீர்ப்பளித்த அந்த பெண் நீதிபதிக்கு 100-க்கும் மேற்பட்ட காண்டம்களை பார்சலில் அனுப்பி வைத்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


Advertisement