இந்தியா

ஓடும் பேருந்தில் குழந்தை கண்முன்னே பாலியல் வன்கொடுமை! பயணிகள் இருந்தும் நேர்ந்த கொடூரம்!

Summary:

Woman raped in running bus at uttarapradesh

உத்தரபிரதேசம்  நொய்டாவில் இருந்து 25 வயது நிறைந்த பெண் ஒருவர் தனது குழந்தையுடன்  மதுராவிற்கு செல்லும் படுக்கைவசதி கொண்ட பேருந்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் அந்த பேருந்தில் 12ற்கும் மேற்பட்ட பயணிகளும் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் இரவில் பேருந்து லக்னோ மற்றும் மதுரா சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேருந்தில் இரு ஓட்டுநர்களும் அந்த பெண்ணிற்க்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

அப்பொழுது ஒரு ஓட்டுநர் பேருந்தை ஓட்டிய நிலையில், மற்றொரு ஓட்டுநர் ஒருவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆனால் இதனை பேருந்தில் பயணம் செய்த யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் இதனால் மிகுந்த வேதனையடைந்த அந்த பெண் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து கவுதம புத்தா நகர் போலீசார் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யபட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பேருந்தைப் பறிமுதல் செய்துள்ளோம். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு ஓட்டுநர் தப்பியுள்ளார். அவரை தீவிரமாக தேடி வருகிறோம். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement