முப்படை தளபதியுடன் சேர்ந்து உயிரிழந்த விமானி.! அவரின் 12 வயது மகள் எடுத்த சபதம்.. என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!!



wing commander daughter says, I want to join the Air Force in the future

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் சென்ற இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். பயணித்த 14 பேரில் 13 பேர் இறந்துவிட்ட நிலையில், ஒருவர் மட்டும் பெங்களூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களில், விங் கமாண்டர் பிரித்வி சிங் சவுகானும் ஒருவர். உத்தரபிரதேசத்தின் ஆக்ராவை சேர்ந்த இவரது உடல் நேற்று முன்தினம் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விங் கமாண்டர் பிரித்வி சிங் சவுகான் மகள் ஆரத்யா, எதிர்காலத்தில் தனது தந்தையை போல விமானப்படையில் இணைய விரும்புவதாகவும், ஏனெனில் அவர்தான் தனக்கு ஹீரோ என்றும் தெரிவித்தார்.

மேலும், என் தந்தை எனக்கு முன்மாதிரியாக இருந்தார். அவர் எப்போதும் எனது இலக்குகளில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தி வந்தார். நான் அவருடைய ஆலோசனையைப் பின்பற்றி என்னுடைய கனவை அடைவேன். மதிப்பெண்களை பெற வேண்டும் என அதை துரத்தாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். படிப்பில் கவனம் செலுத்தினால் மதிப்பெண்கள் தானாக வரும் என என் தந்தை எனக்கு அறிவுரை கூறுவார் என்றும் தெரிவித்தார்.