மீண்டும் மீண்டுமா.. 3 நாள் இடைவெளிக்கு பின் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்..!

மீண்டும் மீண்டுமா.. 3 நாள் இடைவெளிக்கு பின் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்..!



Will it happen again.. After a gap of 3 days, a powerful earthquake occurred.. People in panic..!

நேபாளத்தில் கடந்த 3ம் தேதி அன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து நொறுங்கியதோடு மட்டுமல்லாமல் பல மோசமான அழிவுகளையும் ஏற்படுத்தியது. இந்த கட்டிட இடுப்பாடுகளில் சிக்கி 160க்கும் மேற்பட்டோர் பலியாயினர். மேலும் நேபாள மக்கள் இந்த அச்சத்தில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தின் மேற்கு பகுதியில் மையம் கொண்டு மாலை 4:16 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது . இந்து நிலநடுக்கமானது ரிக்ட்டர் அளவுகோலில் 5.6 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இதனால் அங்கு வாழும் மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Nepal

 இந்நிலையில் நேபாளத்தில் ஏற்பட்ட நலநடுக்கத்தின் தாக்கமானது தலைநகர் டெல்லி, உத்திரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் உணரப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அங்கு வாழும் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.

நிலநடுக்கம் ஒருபுறம் இருக்க தீவிர மாசுபாட்டால் சிரமத்திற்கு உள்ளாகி உள்ள தலைநகரில் வாழும் மக்கள் வீதிகளில் திரண்டதால் பதற்றம் நிலவியது. மேலும் நிலநடுக்கத்தால் அங்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.