கருப்பான கணவன் மீது வெறுப்பை காட்டிய மனைவி.. நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு.!

கருப்பான கணவன் மீது வெறுப்பை காட்டிய மனைவி.. நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு.!



Wife torture Black husband court divorced

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும், இளைஞர் ஒருவருக்கும் கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் பிரச்சனை வெடிக்க ஆரம்பித்துள்ளது. அதாவது கணவன் கருப்பாக இருந்ததால், மனைவி வெறுப்பை காட்டி வந்துள்ளார். இதனை தாங்க முடியாத கணவர் பெங்களூர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார்.

karnataka

ஆனால் நீதிமன்றம் இவர்களை சேர்ந்து வாழ கோரி தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் தான் கருப்பாக இருப்பதால் மனைவி தன்னிடம் வெறுப்பை காட்டுவதாக மனைவி மீது கணவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதேபோல் கணவர் வீட்டார் தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக மனைவி தரப்பில் தெரிவித்துள்ளார். ஆனால் மனைவி தனக்கு விவாகரத்து வேண்டுமன்றே பொய் கூறியது தெரியவந்தது.

karnataka

இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கணவரை நிறம், ஜாதி காரணம் காட்டி துன்புறுத்துவது கொடுமையாக கருதி அந்த தம்பதிகளுக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது.