இந்தியா

ஒரு வருடமாக மனைவியை கழிவறைக்குள் சிறை வைத்த கணவன்.! அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

ஒரு வருடமாக கணவனால் கழிவறைக்குள் பூட்டிவைக்கப்பட்ட பெண்ணை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் மீட்டனர்.

அரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தில் ஒரு பெண் தனது கணவரால் ஒரு வருடத்திற்கும் மேலாக கழிவறைக்குள் பூட்டி வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெண் ஒருவர் தனது கணவரால் ஒரு வருடத்திற்கும் மேலாக கழிவறைக்குள் பூட்டி வைக்கப்பட்டிருப்பதாக பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமண தடை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்த குழுவினர் அங்கு விரைந்துள்ளனர்.

அங்கு சென்று பார்த்தபோது, ஒரு வருடத்திற்கு மேலாக ஒரு பெண் கழிவறையில் பூட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் அந்த பெண் பல நாட்களாக சாப்பிடாமல் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த குழுவினர் அந்த பெண்ணை மீட்டு தலைமுடியைக் கழுவி உணவு அளித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசாரும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


Advertisement