எவ்வளவு கெஞ்சியும் குடிப்பழக்கத்தை கைவிடாத கணவன்!: தரமான சம்பவம் செய்த மனைவி..!

எவ்வளவு கெஞ்சியும் குடிப்பழக்கத்தை கைவிடாத கணவன்!: தரமான சம்பவம் செய்த மனைவி..!


wife killed her husband because he did not give up his drinking habit

குடி பழக்கத்தை கைவிடாததால் கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள பீர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் வினய் ராஜ் (27). இவரது மனைவி ராதா. வினய் ராஜ் தினமும் குடித்துவிட்டு வருவது வழக்கமாக இருந்ததுள்ளது. மதுப்பழக்கத்தை கைவிடும்படி அவரது மனனைவி ராதா தொடர்ந்து கூறி வந்துள்ளார். 

ஆனால், கேட்காமல் வினய் ராஜ் தொடர்ந்து குடித்துவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், ராதா கடந்த சனிக்கிழமை இரவு இந்த பழக்கத்தை விடுமாறு ராஜிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தால் ராதா தனது கணவர் வினய் ராஜை சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளார். 

அதன் பின்னர், தனது கணவரை யாரோ கொலை செய்துவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், ராதாவே அவரது கணவரை கொலை செய்ததை கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து, ராதாவை காவல்துறையினர் கைது செய்தனர்.