கள்ளக்காதலனுடன் வீட்டில் தனிமையாக இருந்த மனைவி.! திடீரென வீட்டிற்கு வந்த கணவன்.! அதன் பின் நடந்த சம்பவம்.!

கள்ளக்காதலனுடன் வீட்டில் தனிமையாக இருந்த மனைவி.! திடீரென வீட்டிற்கு வந்த கணவன்.! அதன் பின் நடந்த சம்பவம்.!


wife illega relation

ராஜஸ்தான் மாநிலம் பக்ஹர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தோர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்ற ரத்தோர் அவருக்குக் கிறிஸ்துமஸ் பரிசாக செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். அதன் பின், இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக அந்த பெண்ணின் கணவன் திடீரென வீட்டிற்குள் வந்துள்ளார். அப்போது தன மனைவி வேறொரு நபருடன் தனிமையாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து, அந்த பெண்ணின் கணவருக்கும் ரத்தோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர், அந்த நபரை எச்சரித்து விட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். மறுநாள் அந்த பெண்ணின் கணவரின் நண்பர்கள் சிலர் ரத்தோரை பிடித்து அவரை அடித்து அவருக்குச் செருப்பு மாலை அணிவித்து நிர்வாணமாக்கி அந்த கிராமம் முழுவதும் ஊர்வலமாகக் அழைத்துச்சென்றுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்துள்ளனர்.