இந்தியா

ஆசை தீர முதல் இரவு! அனைத்தையும் முடித்துவிட்டு கணவன் கூறிய ஒற்றை வார்த்தை! காலையில் காத்திருந்த அதிர்ச்சி!

Summary:

Wife gone after first night over

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் குல்பாம். இவருக்கும், மேனகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து கணவன் - மனைவி இருவரும் முதலிரவு அறைக்குள் சென்றுள்ளனர்.

முதல் இரவுக்கு முன் தனக்கு சில சத்தியம் செய்துதருமாறு மேனகா தனது கணவரிடம் கேட்டுள்ளார். தான் நன்கு படித்து, சற்று வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவள், உங்கள் வீட்டில் எனக்கு போதுமான வசதி இல்லை. அதை நீங்கள் எனக்காக செய்துதரவேண்டும்.

மேலும், உங்கள் தாடி, மீசை, பைஜாமா போன்றவை எனக்கு பிடிக்கவில்லை. எனக்காக நீங்கள் அதை மாற்றிக்கொள்ளவேண்டும் என சில கோரிக்கைகளை மேனகா கணவரிடம் கூறியுள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்து சத்தியமும் செய்துகொடுத்துள்ளார் குல்பம்.

இதனை அடுத்து கணவன் - மனைவி இருவரும் முதல் இரவை கொண்டாடியுள்ளனர். முதல் இரவு முடிந்த கையோடு, உனக்காக என்னை மாற்றிக்கொள்ள முடியாது, நான் இப்படித்தான் இருப்பேன். உனக்காக எந்த வசதியும் செய்துதர முடியாது என கணவன் தனது சத்தியத்தை உடைத்துவிட்டு தூங்க சென்றுள்ளார்.

காலையில் கண் விழித்து பார்த்தபோது தனது மனைவியை காணவில்லை. உடனே இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் குல்பம். இதனை அடுத்து மேனகாக கோபித்துக்கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து இரு வீட்டாரையும் அழைத்து சமாதானம் பேசி அனுப்பிவைத்துள்ளனர் போலீசார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement