தோனி 7, நான் 3..! இதுனாலதான் ஆகஸ்ட் 15 அன்னைக்கு ஓய்வை அறிவித்தோம்..? ரெய்னா கூறிய சுவாரஸ்ய தகவல்.!
தோனி 7, நான் 3..! இதுனாலதான் ஆகஸ்ட் 15 அன்னைக்கு ஓய்வை அறிவித்தோம்..? ரெய்னா கூறிய சுவாரஸ்ய தகவல்.!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுதந்திர தினத்தன்று அறிவித்தது ஏன் என சுரேஷ் ரெய்னா சுவாரசியமான தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு தோனி எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் விளையாடவில்லை. அவர் எப்போது மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தநிலையில் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 15 ஆம் தேதி அறிவித்தார்.
தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்த சில மணி நேரங்களில் சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் மிகவும் விருப்பமான இரண்டு வீரர்கள் ஒரே நாளில் ஓய்வை அறிவித்தது பலரையும் அதிர்ச்சியடைய செய்தது.
மேலும் தோனி, சசுரேஷ் ரெய்னா இருவரும் இந்திய சுதந்திர தினத்தன்று ஓய்வை அறிவிக்க என்ன காரணம் என கேள்விகள் எழுந்தநிலையில் இதுகுறித்து சுரேஷ் ரெய்னா சுவாரசியமான பதில் ஒன்றை கூறியுள்ளார்.
தோனியின் ஜெர்சி நம்பர் 7, என்னுடைய ஜெர்சி நம்பர் 3, இரண்டும் சேர்ந்தால் 73. ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியா தனது 73-வது சுதந்திர தினத்தை நிறைவு செய்தது. அதனால்தான் சுதந்திரத்தினத்தற்று ஓய்வு முடிவை அறிவித்ததாக சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.