சபரிமலைக்கும் ரெஹானா பாத்திமாவிற்கும் என்ன தொடர்பு; அவர் எதற்காக இப்படி செய்கிறார்?

சபரிமலைக்கும் ரெஹானா பாத்திமாவிற்கும் என்ன தொடர்பு; அவர் எதற்காக இப்படி செய்கிறார்?


why-fathima-wants-to-go-sabarimalai

பெண்களை சபரிமலை ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்று பல நாட்களாக நடைபெற்ற வழக்கில் உச்சநீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரி மலைக்குச் செல்லலாம் என தீர்ப்பு வழங்கியது. இதற்கு ஆண் பெண் பாகுபாடு இருக்கக் கூடாது என்பதுதான் முக்கிய காரணம் என நீதிபதிகள் கூறினர். இதனை எதிர்த்து கேரளா முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.

உண்மையாகவே கடவுள் பக்தி உள்ள எந்த பெண்களும் ஐயப்பனை தரிசிக்க செல்ல முயற்சி செய்வதாக தெரியவில்லை. வேண்டுமென்றே பல கோடி பக்தர்களின் நம்பிக்கையை சீரழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு சிலர் மட்டும் கோவிலுக்குள் செல்ல முயற்சி செய்து வருகின்றனர். அதில் முக்கியமான ஒருவர் பெயர் ரெஹானா பாத்திமா. 

why fathima wants to go sabarimalai

இவன் நடந்து கொள்ளும் விதங்களை எல்லாம் பார்க்கும்போது இவருக்கு உண்மையாகவே கடவுள் நம்பிக்கை இருக்கின்றதா என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுகின்றது. இவர் வேண்டுமென்றே சபரிமலைக்கு கலங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செல்வதாகத்தான் பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

இவர் ஏன் இப்படி செய்ய வேண்டும்? இவருக்கும் சபரிமலைக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுகின்றது. இதைப்பற்றி அவரது பின்னணியை ஆராய்ந்து பார்க்கும் பொழுது இவரைப் பொறுத்தவரை ஆண் பெண் என்ற வேறுபாடு இருக்கக்கூடாது; பெண்கள் எப்போதுமே ஆண்களுக்கு இணையானவர்கள் தான் என்பதை நிரூபிப்பதற்காகவே இவ்வாறு போராடுகிறார் என்பது இவரது பின்னணியின் மூலம் தெரிகிறது.

why fathima wants to go sabarimalai

கேரளாவில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர்தான் இந்த ரெஹானா பாத்திமா. ஆனால் இவர் தற்போது அந்த மதத்தில் இருந்து வெளியே வந்து விட்டதாக கூறிவருகிறார். இவர் கேரளாவில் பெண்களின் உரிமைக்காக போராடி வருபவர். இவரது சொந்த ஊர் எர்ணாகுளம்.

இவர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் டெலிகாம் டெக்னிஷியனாக  பணிபுரிந்து வருகிறார். 31 வயது ரெஹானா ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றிய 'எகா ' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்கிய மனோஜ் என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருவதாக அறியப்படுகிறது.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற முத்த போராட்டத்தில் கலந்து கொண்டு ரெஹானா முன்னிலை வகித்து உள்ளார். கிஸ் ஆப் இந்தியா என்ற அமைப்பை சேர்ந்த இவர் முன்னதாக, ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருச்சூர் புலிக்கலி என கூறப்படும் பாரம்பரிய புலி நடனத்தில் 2016 ஆம் ஆண்டு முதல் பெண்ணாக கலந்து கொண்டுள்ளார். 

why fathima wants to go sabarimalai

தற்போதுகூட சபரிமலைக்கு செல்ல அணிந்து கொள்ளும் ஆடைகளை அணிந்துகொண்டு ஆபாசமாக எடுத்த புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவானது ஐயப்பன் மேல் மிகுந்த பயபக்தி கொண்டிருக்கும் அனைத்து பக்தர்களையும் நோகடிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இதனால் மிகுந்த வேதனை அடைந்த பலர் இவரை பற்றி மோசமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.