நிலவின் தென்துருவதில் என்னதான் இருக்கிறது?! சந்திரயான்-3 எப்படி தரையிறங்க போகிறது தெரியுமா?!

நிலவின் தென்துருவதில் என்னதான் இருக்கிறது?! சந்திரயான்-3 எப்படி தரையிறங்க போகிறது தெரியுமா?!



what is in Moon, how can chandrayaan land in moon

முந்தைய காலகட்டத்தில் நிலவின் தென் பகுதி முழுவதும் சூரிய வெளிச்சம் படாமல் இருந்தது. ஆனால் இயற்கையில் ஏற்பட்ட சில மாற்றங்களின் காரணமாக நிலவின் தென்துருவத்தின் சில இடங்களில் சூரிய வெளிச்சம் பட்டது. இந்த பகுதியை தான் சந்திரயான்-3 தற்போது ஆராய போகிறது. 

இந்த மாற்றத்தினால் நிலவின் அடியாழத்தில் இருந்த ஐஸ் கட்டிகள் சில உருகி, தண்ணீரை உருவாக்கியது. இதையே சந்திரயான்-1 கண்டுபிடித்து நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது. 

இந்நிலையில் தற்பொழுது செலுத்தப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலமானது, நிலவில் சூரிய ஒளி படும் இடங்களை மட்டுமல்லாமல் சூரிய ஒளி படாத இடங்களையும் ஆராய்ச்சி செய்ய உள்ளது. 

இவற்றை ஆராய்ச்சி செய்வதால், அங்குள்ள நீரின் அளவு, உயிரினம் வாழ இயலுமா? மதிப்பு வாய்ந்த தனிமங்கள் உள்ளதா? என்று அறிய முடியும். மேலும், சூரிய ஒளி படாத பகுதியை ஆராய்ச்சி செய்வதன் மூலம், பல அறியப்படாத தகவல்களும் கிடைக்கும். 

ISRO

சந்திரயான்-2இல் இருந்தது போல ஆர்பிட்டர் இல்லை. மாறாக விக்ரம் என்ற லேண்டர் மற்றும் பிரக்யான் எனப்படும் ரோவர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ப்ரோபல்ஷன் மாடல் என்ற ஒரு உந்த கூடிய ப்ரோபல்ஷன் என்ற பகுதியும் உள்ளது. இதுதான் இந்த லேண்டர், ரோவரை நிலவிற்கு கொண்டு சென்றுள்ளது.

தற்போது சந்திரயான்-3 விண்கலனானது நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வலம்வரும் முந்தைய சந்திரயான்-2 ஆர்ப்பிட்டருடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. சந்திரயான்-3 விண்கலனானது நாளை மாலை 6 மணி 4 நிமிடத்துக்கு நிலவில் தரை இறக்கப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

தரையிறக்கப்படும் 15 நிமிடத்துக்கு முன்னர் லேண்டர் கருவியானது, 30 கி.மீ. உயரத்துக்கு கொண்டுவரப்பட்டு 8 கட்டங்களாக பிரிக்கப்படும். 

 இவ்வாறு ஒவ்வொரு கட்டமாக பிரிக்கப்பட்டு 150 மீட்டர் உயரத்துக்கு லேண்டர் கருவி வந்தபின் 22 நொடிகள் அந்தரத்தில் அப்படியே மிதக்கும். ஏனென்றால், அந்த 22 நொடிகளும் நிலவில் இறங்குவதற்கு சரியான இடத்தை தேர்வு செய்வதற்கும், ஆபத்து ஏதேனும் உள்ளதா என்பதை ஆராயவும் உதவும். 

ISRO

துல்லியமான இடத்தை தேர்வு செய்த பின், லேண்டர் கருவி மெதுவாக கீழ் இறங்கத் தொடங்கும். அதன்பின் 5வது கட்டமாக 150 மீட்டர் உயரத்தில் இருக்கும் லேண்டர் கருவி 60 மீட்டர் உயரத்துக்கு குறைக்கப்பட்டு, இறகைப் போல மெதுவாக தரையிறங்கும். 

6வது கட்டமாக லேண்டர் கருவிக்கும், நிலவுக்கும் இடையேயான உயரம் 10 மீட்டராக குறைக்கப்படும். அதன்பின் அடுத்தகட்டமாக 10 மீட்டர் தூர இடைவெளியில் இருந்து லேண்டர் கருவி நிலவின் தரையில் விழ வைக்கப்படும். 

இவ்வாறு விழும் லேண்டர் கருவியானது, நொடிக்கு 2 அல்லது 3 மீட்டர் வேகத்தில் விழுந்தாலும், அதை தாங்கும் அளவிற்கு, லேண்டரின் கால்கள் பலமானதாக அமைக்கப்பட்டுள்ளன. 

நிலவில் இறங்கிய பிறகு, மண் துகள்கள் புழுதியாக எழும் வாய்ப்புள்ளதால், அடுத்த 2 மணி நேரத்துக்கு எந்த செயல்பாடும் இருக்காது. அதன்பின் லேண்டர் கருவியில் உள்ளே உள்ள ரோவர் கருவியை வெளியே கொண்டுவரும் 8வது கட்டம் தொடங்கும். 

 இந்த ரோவர் கருவி நிலவின் தரைப் பகுதிக்கு மெதுவாக ஊர்ந்து வந்து, பின்பக்கமாக திரும்பி, லேண்டர் கருவியை படம் எடுக்கும். அதே போல், லேண்டர் கருவியில் உள்ள கேமராவும், ரோவர் கருவியை படம் பிடிக்கும். அதன்பின் ரோவர் கருவி, குறிப்பிட்ட தூரத்துக்கு ஊர்ந்து சென்று, 14 நாட்களுக்கு சோதனைகளை நடத்தும்.