இன்பச்செய்தி.. வோடபோன் ஐடியா வாடிக்கையாளரா நீங்கள்?.. இனி 2 ஜி.பி இலவசம்.!!

இன்பச்செய்தி.. வோடபோன் ஐடியா வாடிக்கையாளரா நீங்கள்?.. இனி 2 ஜி.பி இலவசம்.!!


Vodafone Idea Announce Data Delights Service to Customers

வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் செல்போன் மற்றும் இன்டெர்னட் சேவை என்பது அதிமுக்கிய அத்தியாவசிய இடத்தை பெற்றுவிட்டது. இந்தியாவை பொறுத்த வரை உள்ள பிரதான நெட்ஒர்க் அமைப்புகளான ஏர்டெல், ஐடியா, ஜியோ, பி.எஸ்.என்.எல் போன்றவை அவ்வப்போது தனது சேவைக்கான கட்டணத்தை உயர்த்தி, சில வழிகளில் சலுகையும் வழங்குகிறது. 

அந்த வகையில், வோடபோன் ஐடியா நிறுவனம் தனது பிரீபெய்டு வாடிக்கையாளருக்கு Data Delights என்ற சலுகையை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த சலுகையின்படி, வாடிக்கையாளர் ஒவ்வொரு மாதத்திலும் கூடுதல் கட்டணம் செலுத்தாமல் 2 ஜி.பி இணையசேவையை பெற முடியும். 

India

தேர்வு செய்யப்பட்ட சில பிரீபெய்டு திட்டத்திற்கு Data Delights சேவைகள் பொருந்தும். இந்த சேவையை பெற வாடிக்கையாளர்கள் 121249 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு சேவையை செயல்படுத்தலாம். தகுதியில்லாத வடிக்கையாளருக்கான விளக்கமும் வழங்கப்படும். இதனைப்போல வோடபோன் ஐடியா அலைபேசி செயலி வழியாகவும் இச்சேவைக்கு விண்ணப்பிக்கலாம். 

ரூ.299 ரூ.359 ரூ.409 ரூ.475 ரூ.479 ரூ.501 ரூ.539 ரூ.719 ரூ.839 ரூ.901 ரூ.1449 ஆகிய அன்லிமிடெட் டேட்டா சேவைகளில் Data Delights சேவைகள் வழங்கப்படும். இரண்டு நாட்களுக்கு 1 ஜி.பி என்ற அளவில், 2 முறை இச்சேவை வழங்கப்படும்.