இந்தியா விளையாட்டு

தீவிரமாகும் கொரோனா!! கொரோனாவை எதிர்கொள்ள 2 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்த விராட் கோலி - அனுஸ்கா!!

Summary:

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பால் மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், வ

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பால் மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், விராட் கோலி தம்பதி 2 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு படுவேகமாக உயர்ந்துவருகிறது. இந்தியாவில் நாள்தோறும் பலலட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும், ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துவருகின்றனர். உலகமே இந்தியாவை தற்போது உற்றுநோக்கிவருகிறது.

மேலும் பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாகவும் உதவிகள் செய்து வருகின்றன. அதேபோல் இந்தியாவில் உள்ள மக்களும் மருத்துவ உபகரணங்கள் வாங்க தங்களால் முயன்ற நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் அவரது மனைவி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தம்பதி 2 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளனர்.


Advertisement