ரீல்ஸ் மோகம்.. பைக் பெட்ரோல் டேங்கில் மனைவிகளை அமர வைத்து பயணம் செய்த வாலிபர்கள்- வைரலாகும் வீடியோ.



viral-reels-risky-bike-ride

திருத்தணியில் இளம் தலைமுறையினரின் ரீல்ஸ் வீடியோ மோகத்தால் ஆபத்தான செயல்கள் அதிகரித்து வருகின்றன. அவர்கள் செல்லும் இடங்கள், செய்யும் சாகசங்களை புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது பரவலாக உள்ளது.

அந்த வரவேற்புக்காக சிலர் உயிருக்கு ஆபத்தான செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இந்த செயல்கள் சில நேரங்களில் உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கின்றன.

அதன் ஒரு பகுதியாக, திருத்தணி-அரக்கோணம் புறவழிச் சாலையில், இரண்டு வாலிபர்கள் தங்கள் மனைவிகளை மோட்டார் சைக்கிளின் முன்பக்க பெட்ரோல் டேங்கில் அமர வைத்து அதிவேகமாக பாய்ந்து, ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: உன் தங்கச்சினா என்ன செஞ்சிருப்ப? திடீரென பரபரப்பான தமிழா தமிழா!! வைரல் வீடியோ.

இந்த ஆபத்தான ரீல்ஸ் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.