பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
ரத்தத்தில் விஜயகாந்தின் உருவத்தை வரைந்த ஓவியர்: அளவில்லாத அன்பால் நெகிழ்ச்சி செயல்.!
தேமுதிக தலைவரும், மூத்த நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். இவரின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்திற்குள்ளாக்கியுள்ளது.
அதேபோல திரைத்துறைக்கு பல நன்மைகளை செய்த விஜயகாந்தின் மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள் திரளாக நேரில் கலந்துகொண்டு தங்களின் அஞ்சலியை பதிவு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியைச் சார்ந்த இளைஞர் அரவிந்த் என்பவரும் விஜயகாந்தின் மீது அளவு கடந்த பற்று கொண்டவர் ஆவார்.
இந்நிலையில் இவர் தான் விஜயகாந்த் மீது வைத்த அன்பை வெளிப்படுத்தும் வகையில், தனது 3 மில்லி ரத்தத்தால் விஜயகாந்தின் உருவப் படத்தை வரைந்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.