வாயு புயலின் கோரத் தாண்டவத்திலிருந்து தப்பித்த குஜராத்; புயலின் அடுத்த நகர்வு எங்கு தெரியுமா?

வாயு புயலின் கோரத் தாண்டவத்திலிருந்து தப்பித்த குஜராத்; புயலின் அடுத்த நகர்வு எங்கு தெரியுமா?



vayu-cyclone-next-plan---ooman---refrigirater-center

அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. உருவான இந்த புயலுக்கு ‘வாயு’ என்று பெயர் சூட்டப்பட்டது. இது தீவிர புயலாக மாறி மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் குஜராத் நோக்கி நகர்ந்தது. இந்த புயல் வியாழக்கிழமை குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

புயல் கரையை கடக்கும்பொழுது மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், ஒரு சில இடங்களில் 135 கிலோ மீட்டர் வரை காற்றின் வேகம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை கருதி, குஜராத் மற்றும் டியூ ஆகிய இடங்களில் கடலோரத்தில் வசிக்கும் சுமார் மூன்று லட்சம் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற குஜராத் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டது.

இந்நிலையில் தற்போது, குஜராத்தின் டியு நகரில் இருந்து 240 கிலோ மீட்டர் தொலைவிலும், போர்பந்தரில் இருந்து 130 கிலோ மீட்டர் தொலைவிலும்  வாயு புயல் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட வாயு புயல், தற்போது ஓமனை நோக்கி நகர்ந்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.