வாஜ்பாயின் தமிழ் பேச்சை கேட்டிருக்கிறீர்களா?

வாஜ்பாயின் தமிழ் பேச்சை கேட்டிருக்கிறீர்களா?


vajpayee-talks-in-tamil

முன்னாள் பிரதமரான வாஜ்பாய் உடல்நல குறைவு காரணமாக  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று மாலை காலமானர்.  இந்தியாவின் பழையான தலைவர்களில் ஒருவராக பார்க்கப்படும் வாஜ்பாய், பாஜகவில் பலம் வாய்ந்த தலைவர்களில் ஒருவர் ஆவர்.

அவரின் பேச்சுகள், கவிதை, பெரும்பாலான மக்களால் அதிகம் ரசிக்கப்பட்டவை. 

 1996ல் நடந்த பொதுத் தேர்தலில், பி.ஜே.பி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால், அப்போதைய பிரதமரான ஷங்கர் தயால் ஷர்மா, வாஜ்பாயை பிரதமராகப் பொறுப்பேற்க சொன்னார். இந்தியாவின் 11வது பிரதரமராக வாஜ்பாய் பதவியேற்றார்.

ஆனால், மற்ற கட்சிகளின் ஆதரவு கிடைக்காததால், பதவியேற்ற 13 நாட்கள் கழித்து, பிரதமர் பதவியிலிருந்து வாஜ்பாய் ராஜினாமா செய்தார். நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற போதுமான ஆதரவு இல்லாததால் ஆவேசமாக உரையாற்றினார்.

அந்த உரையின் போது தான் தமிழ் கவிஞர் பாரதியின் வரிகளை தமிழிலியே சுட்டிக் காட்டினார். “முப்பது கோடி முகமுடையாள் ,உயிர் மொய்ம்புற வொன்றுடையாள் -இவள் செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள்” என்பதே அந்த கவிதை.

இந்த தேசத்தின் மொழி, இனம், கலாச்சாரம் வெவ்வேறாக இருந்தாலும் சிந்தனையில் பாரதம் ஒரே நாடு தான் என்பது அந்த கவிதையின் பொருள் ஆகும்.