இந்தியா

இரட்டையர்களின் வேடம் கலைந்தது!..அண்ணியுடன் உடலுறவு கொண்ட தம்பியும், உடந்தையாக இருந்த அண்ணனும்..! பகீர் சம்பவம்.!

Summary:

இரட்டையர்களின் வேடம் கலைந்தது!..அண்ணியுடன் உடலுறவு கொண்ட தம்பியும், உடந்தையாக இருந்த அண்ணனும் கைது..!

உருவ ஒற்றுமையை பயன்படுத்தி அண்ணியுடன் உடலுறவு கொண்ட தம்பியும், உடந்தையாக இருந்த அண்ணனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கணவர் என்று நினைத்து கணவரின் தம்பியுடன் உறவு வைத்திருந்திருக்கிறார் ஒரு புது மணப்பெண் இரட்டை சகோதரர்களான அண்ணன் தம்பி இருவருக்கும் வித்தியாசம் தெரியாததால் தம்பியுடன் உறவு வைத்துள்ளார். தான் உறவு கொண்டது கணவரின் தம்பியுடன் என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் லத்தூர் மாவட்டத்தில் ரிங் ரோடு பகுதியில் வசித்து வரும் இளைஞருக்கும், 20 வயது இளம் பெண்ணுக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. மணமகனுக்கு ஒரு தம்பி உள்ளார் இருவரும் இரட்டை சகோதரர்கள். இருவரும் ஒரே மாதிரியாக இருந்ததால் இருவரில் யார் தன் கணவர் என்று அடையாளம் காண்பதில் பெரும் சிரமமாக இருந்திருக்கிறது அந்த பெண்ணுக்கு.  இதனால் வித்தியாசம் புரியாமல் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார்..

இதைப் பயன்படுத்திக் கொண்ட அப்பெண்ணின் கணவருடைய தம்பி  அண்ணியை அடைய துடித்துள்ளார். ஒரு நாள் அண்ணியை உறவுக்கு அழைத்திருக்கிறார், கணவர்தான் தன்னை அழைக்கிறார் என்று நினைத்து அந்தப் பெண் அவருடன் உறவு கொண்டிருக்கிறார். பல மாதங்கள் இது தொடர்ந்துள்ளது.

ஒரு கட்டத்தில் தான் உறவு கொண்டது கணவர் அல்ல கணவரின் தம்பி என்ற விவரம் ஆறு மாதங்களுக்குப் பின்னர் தான் அப்பெண்ணுக்கு தெரிய வந்திருக்கிறது. அதிர்ச்சி அடைந்த அப்பெண் தன் கணவரிடம் சொல்லி அழுதுள்ளார்.  தன் கணவர் கணவர் தம்பியின் செயலுக்காக அவர் மீது ஆத்திரப்பட்டு நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்த்த பெண்ணுக்கு மேலும் ஒரு பேரதிர்ச்சி ஏற்பட்டது.

அதனால் என்ன? நானும் அவனும் ஒன்றாகவே வளர்ந்தோம், ஒன்றாகவே ஒரே பெண்ணை அனுபவித்து விட்டுப் போகிறோம் நீ அவன் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தாய் வீட்டுக்குச் சென்று நடந்ததை கூறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர், சிவாஜி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர் இரட்டை சகோதரர்களை கைது செய்துள்ளனர்.


Advertisement