தமிழகம் இந்தியா

வீடியோ: பாம்பு கடியில் இருந்து உயிர்பிழைத்த வா வா சுரேஷ் இப்போ என்ன பண்றார் பாருங்க!! வைரல் வீடியோ..

Summary:

வீடியோ: பாம்பு கடியில் இருந்து உயிர்பிழைத்த வா வா சுரேஷ் இப்போ என்ன பண்றார் பாருங்க!! வைரல் வீடியோ..

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த 12 அடி நீளமுள்ள ராஜ நாக பாம்பை, வாவா சுரேஷ் லாவகமாக பிடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் பாம்பு பிடி வீரர்கள் என்றால் அதில் மிகவும் பிரபலாமானவர்களில் ஒருவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வாவா சுரேஷ். பாம்புகளை பிடிப்பதில் கைதேர்ந்த இவர்  கடந்த ஜனவரி மாதம், சங்கனாச்சேரி பகுதியில் பாம்பு பிடித்த போது நாகப்பாம்பு தீண்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவர் உயிர்பிழைத்து மீண்டுவரவேண்டும் என இந்தியா முழுவதும் பலர் பிரார்த்தனை செய்தனர். அதன் பலனாக வாவா சுரேஷ் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் ஒரு மாதம் கழித்து மீண்டும் பாம்புப் பிடிக்கத் தொடங்கியுள்ள அவர், பத்தினம்திட்டாவில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ராஜநாகத்தை லாவகமாக பிடித்துள்ளார்.

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த பாம்பை வாவா சுரேஷ் சாக்குப்பையில் போட்டு அங்கிருந்து எடுத்து சென்றார். இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.


Advertisement