தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
17 வயது சிறுமி 10 நாட்களாக வீட்டில் அடைத்து பலாத்காரம்: அதிர்ச்சி சம்பவம் அம்பலம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற சிறுமி மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் சகோதரர் மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் பலனில்லை. இந்த விஷயம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகாரளிக்கவே, அதிகாரிகளும் விசாரணை நடத்தி வந்தனர்.
10 நாட்களுக்குப் பின்னர் நேற்று சிறுமி தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அவரிடம் விசாரித்த போது, அப்பகுதியைச் சார்ந்த ராஜேஷ் என்ற 30 வயது நபர் தன்னை கடத்திச்சென்று வீட்டில் அடைத்து வைத்து பத்து நாட்களாக பலாத்காரம் செய்ததை தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, விசாரணை நடத்திய காவல்துறையினர் ராஜேஷ்க்கு எதிராக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.