இந்தியா உலகம்

கனடாவில், இந்திய மாணவர் சுட்டுக்கொலை.. பகுதிநேர வேலையின்போது நடந்த பயங்கரம்.. கண்ணீர் சோகம்.!

Summary:

கனடாவில், இந்திய மாணவர் சுட்டுக்கொலை.. பகுதிநேர வேலையின்போது நடந்த பயங்கரம்.. கண்ணீர் சோகம்.!

இந்திய கல்லூரி மாணவர் கனடாவில் நடந்த துப்பாக்கிசூட்டில் பரிதாபமாக உயிரிழந்தார். 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் மாவட்டம் சாஹிபாபாத்தை சேர்ந்தவர் கார்த்திக் வாசுதேவ் (வயது 21). இவர் கனடாவில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். மேலும், அங்கு தேவைப்படும் செலவில் குறைந்தளவே தானே பூர்த்தி செய்யும் பொருட்டு, பகுதிநேர வேலைபார்த்தும் வந்துள்ளார்.

நேற்று அங்குள்ள டொரோண்டோ நகரின் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு அருகே உள்ள உணவகத்தில் அவர் வேலைபார்த்துக்கொண்டு இருந்த நிலையில், அங்கு நடந்த துப்பாக்கி சண்டையில் அவரின் மீது குண்டு பாய்ந்து பரிதாபமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விஷயம் அவரின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் அவர்கள் கண்ணீரில் திகைத்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட விஷயம் தொடர்பாக உள்ளூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்திய தூதரக அதிகாரிகள் கார்த்திக்கின் உடலை மீட்டு வர தேவையான நடவடிக்கை எடுத்துள்ளனர். 3 நாட்களில் அவரின் உடல் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement