8 வது மாடியில் இருந்து கீழே விழுந்த லிப்ட்; 9 பேர் படுகாயம்.!Uttar Pradesh Noida Sector 126 Lift Collapse 9 Injured 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா, செக்டர் 126ல் ரிவர் சைட் டவர் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 

8 மாடிகள் கொண்ட குடியிருப்பில், நேற்று அங்கு வசித்துவரும் ஆஷு ஷர்மா, அபிஷேக் குப்தா, அபிஷேக் பண்டிட், ரஜத் சர்மா, சாகர், ஷுபம் பரத்வாஜ், அபிஜீத், சௌரப் கட்டியா, மற்றும் பியூஷ் ஆகியோர் லிப்டில் இருந்துள்ளனர். 

அச்சமயம் திடீரென லிப்ட் 8 வது மாடியில் இருந்து கீழே விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் லிப்டுக்குள் இருந்த 9 பேரும் காயமடைந்தனர்.

இவர்கள் அனைவரும் 22 வயது முதல் 29 வயது வரை உள்ள இளைஞர்கள் ஆவார்கள். விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

இவர்களில் யாரும் நல்வாய்ப்பாக கவலைக்கிடமாக இல்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.