ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
செல்போன் டவர் மீது ஏறி திருமணத்திற்கு சம்மதம் வாங்கிய காதல் ஜோடி; 3 மணிநேரம் கதறல் போராட்டம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மொராதாபாத், மதியா கிராமத்தை சேர்ந்தவர் சுமித் (24). ஜான்பூர் பகுதியில் வசித்துவரும் இளம்பெண் சாந்தினி (19). இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது, பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.
இருவரின் காதல் விவகாரமும் இருதரப்பு பெற்றோருக்கு தெரியவர, அவர்கள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். ஜான்பூரில் வேலைக்கு சென்ற இடத்தில் காதல் வயப்பட்ட நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு சுமித் காதலியுடன் தனது சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார்.
3 மணிநேரத்திற்கு பின் கைவிடப்பட்ட போராட்டம்
இதனிடையே, நேற்று பெண்ணின் குடும்பத்தினர் தங்களின் மகளை தேடி சுமித்தின் கிராமத்திற்கு வந்துவிட, அவர்கள் தங்களுடன் மகளை அழைத்து செல்ல முற்பட்டுள்ளனர். இதனால் பதறிப்போன காதல் ஜோடி, அங்கிருந்த மொபைல் டவர் மீது ஏறி தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டி இருக்கிறது.
இதையும் படிங்க: காதல் திருமண விவகாரத்தில் மச்சான் கொடூர கொலை; பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் பகீர் சம்பவம்.!
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இருவரையும் கீழே இறங்க பேசியும் பலன் இல்லை. காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு சுமார் 3 மணிநேர பேச்சுவார்த்தைக்கு பின்னர், குடும்பத்தினர் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதை அடுத்து இருவரும் கீழே வந்தனர்.
இதையும் படிங்க: நடுரோட்டில் சேர் போட்டு மழையை ரசித்த நபர்; மரண பீதியை கிளப்பிய லாரி ஓட்டுநர்.. தரமான சம்பவம்.!