டீக்கடை சிலிண்டர் வெடித்து சிதறி பயங்கர விபத்து; ஒருவர் பலி., பதைபதைக்க வைக்கும் காட்சிகள்.!uTTAR PRADESH KANPUR CYLINDER BLAST 1 dIED 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் மாவட்டம், உத்திரப்பூர் கிராமத்தில் தாபா ஒன்று செயல்பட்டு வருகிறது. தாபாவுக்கு அருகே டீக்கடையும் செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், தாபாவில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்திற்குள்ளானதில், அதன் அருகே இருந்த டீக்கடையும் சேதமானது. இந்த சம்பவத்தில் இளைஞர் ஒருவர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். 

மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர். 4 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

விபத்தில் உயிரிழந்த இளைஞர் நிகில் என்றும், படுகாயமடைந்தவர் அமன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தின் அதிர்ச்சி வெளியாகியுள்ளது.