விருப்பமின்றி பலமுறை பலாத்காரம்., 20 வயது இளைஞனை கொன்று புதைத்த இளம்பெண்; தோழியின் கணவருடன் சேர்ந்து பரபரப்பு செயல்.!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கஸ்கஞ் பகுதியை சேர்ந்தவர் அபூஜர் (வயது 20). இவரின் உறவினர் மனைவிக்கு 20 வயது ஆகிறது. 20 வயது பெண்ணின் கணவர் உடல்நலக்குறைவால் கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்துள்ளார்.
இதனை தனக்கு சாதகமாக்கிய அபுஜர், 20 வயது இளம்பெண்ணை பலமுறை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அவனின் மீது ஆத்திரத்தில் இருந்து வந்த இளம்பெண், தனது தோழியிடம் அபுஜரின் அணுகுமுறை குறித்து கூறி வந்துள்ளார்.
ஒருகட்டத்தில் அபுஜர் தனது கொடூரத்தை தொடர்ந்து வந்ததால், ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்கு சென்ற பெண்மணிக்கு கொலை செய்யும் எண்ணம் எழுந்துள்ளது. இதனையடுத்து, தனது தோழியின் கணவரான இர்பான் (வயது 36) என்பவர் உதவியுடன், அபுஜரை கொலை செய்துள்ளனர்.
உடலை அங்குள்ள யமுனை ஆற்றின் கரையில் விட்டுவிட்டு என்ற நிலையில், சடலத்தை மீட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி அங்குள்ள 20க்கும் மேற்பட்ட கேமிராக்களை தொடர்ந்து ஆய்வு செய்து குற்றவாளிகளை கண்டறிந்துள்ளனர்.
விசாரணையில் அபுஜர் பெண்ணை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்ததும், அதனால் ஏற்பட்ட விரக்தியில் தோழியின் கணவருடன் அபுஜரை கொலை செய்ததும் அம்பலமானது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.