புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
கேஸ் சிலிண்டர் வெடித்து தரைமட்டமான வீடு; 4 பேர் பரிதாப பலி., நெஞ்சை உலுக்கும் சோகம்.!
சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறி 4 பேர் உயிரிழந்தனர்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லோனி, பப்லூ கார்டனில் இருக்கும் வீட்டில் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில், வீட்டின் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.
இதனால் வீட்டில் இருந்த 10 மாத கைக்குழந்தை உட்பட 6 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்காக அலறித்துடித்தனர். இதுகுறித்த தகவல் அறிந்தமீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.