தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து.. திருமணத்திற்கு சென்ற ஒரே குடும்பத்தினர் 7 பேர் பரிதாப பலி..!

தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து.. திருமணத்திற்கு சென்ற ஒரே குடும்பத்தினர் 7 பேர் பரிதாப பலி..!



uttar-pradesh-family-dead-in-national-highway

கார் ஒன்று மற்றொரு வாகனத்தின் மீது மோதியதில், 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா மாவட்டம், யமுனா விரைவுச்சாலையில் இன்று அதிகாலைவேளையில் ஒரு குடும்பத்தினர் காரில் சென்று கொண்டிருந்துள்ளனர். 

அப்போது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த, மற்றொரு வாகனத்தின் மீது கார் வேகமாக மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில், காரில் பயணித்த 3 ஆண் மற்றும் 3 பெண், 1 குழந்தை என 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். 

இதனை கண்ட வாகன ஓட்டிகள் உடனடியாக அங்கு சென்று பார்க்கையில், காரில் பயணித்த எழுவர் இறந்த நிலையில், 1 ஆண் மற்றும் மற்றொரு குழந்தை இருவரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியதை தொடர்ந்து, அவர்களை மீட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

பின் இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறை கண்காணிப்பாளர் ஷ்ரிஷ் சந்த்ரா, சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த 7 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில், உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும், நொய்டாவில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற நிலையில், இன்று அதிகாலை இந்த விபத்து எதிர்பாராதவிதமாக நடந்துள்ளது எனவும் தெரியவந்தது.

இதனையடுத்து இது குறித்து அறிந்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், 'உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டு இருக்கிறார்.