த்ரிஷா புடவையில் விஜயின் கட்சி கொடி.. பிரபல தயாரிப்பாளர் சரமாரி கேள்வி?
8 ப்பு பாஸ் ஆகலை.. கேடி புத்தியால் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி பலாத்காரம்; பெண் போலீசும் சிக்கி பரிதவித்த சோகம்.!
உத்திரதேசம் மாநிலத்தில் உள்ள பரெய்லி பகுதியை சேர்ந்தவர் ராஜன் வர்மா. இவர் 8ம் வகுப்பு வரை மட்டுமே பயின்றுள்ளார். மேற்படி படிக்கவில்லை. படிக்கும்போது என்சிசி வகுப்பில் இருந்ததாக தெரியவருகிறது. இதனிடையே, அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம், மற்றும் காவல் அதிகாரி போல தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பயன்படுத்தி, இவர் பல பெண்களிடம் தன்னை காவலர் என கூறி அறிமுகம் செய்துள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
இவரின் வலையில் விழுந்த பல பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின் திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பணம் மற்றும் நகைகளை திருடிக்கொண்டு தப்பிச்செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய அதிகாரிகள், இளைஞரை இன்று கைது செய்தனர்.
இதையும் படிங்க: ஜெர்மனிய பெண்ணை பலாத்காரம் செய்த விவகாரம்; குற்றவாளி புற்றுநோயால் உயிரிழப்பு.!
பெண் காவலர்களும் பாதிப்பு
தன்னை காவலர் எனக்கூறி, உபி மாநில காவல்துறையில் வேலை பார்த்து வந்த சில பெண் காவலர்களிடமும் அத்துமீறி தப்பி சென்றது தெரியவந்தது. அம்மாநிலத்தில் உள்ள மொராதாபாத், லக்கிம்பூர் கேரி, ஷ்ராவஸ்தி, பரெய்லி ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெவ்வேறு பேர்களை வைத்து பெண்களிடம் முதலில் நட்பாக பழகும் வர்மா, பின் காதலில் வீழ்த்தி, போலியான திருமண வாக்குறுதியை கொடுத்து பணம் மற்றும் நகைகளை திருடி தப்பிச்செல்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். ஒருசில நேரம் பெண்களிடம் அத்துமீறவும் செய்துள்ளார். விசாரணை தொடருகிறது.
இதையும் படிங்க: 7 வயது சிறுமியை சீரழித்த பூசாரி; அடித்துநொறுக்கிய பொதுமக்கள்.!