#Breaking: இந்தியாவையே உலுக்கிய கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில்., குற்றவாளி பாபா சின்மயானந்தா விடுதலை.. காரணம் இதுதான்.!

#Breaking: இந்தியாவையே உலுக்கிய கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில்., குற்றவாளி பாபா சின்மயானந்தா விடுதலை.. காரணம் இதுதான்.!



Uttar Pradesh Baba Chinmayanand Ex Union Minister Release against Sexual Abuse Case 

 

பலாத்காரம் செய்யப்பட்டதாக மாணவிகள் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாஜக பிரமுகர் மற்றும் சாமியார், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இறுதி வாதத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரை வாபஸ் பெற்றதன் பேரில் வழக்கு முடித்துவைக்கப்பட்டது. 

உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சாமியார் மற்றும் முன்னாள் மத்திய உள்துறை இணை அமைச்சர் சின்மயானந்தா (Baba Chinmayanand). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரின் மீது 2 மாணவிகள் பாலியல் பலாத்காரம் தொடர்பான அதிர்ச்சி புகாரை முன்வைத்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வழக்கு விவகாரம் இந்தியாவையே பதறவைத்தது.

கடந்த 2011ம் ஆண்டு சின்மயானந்தா மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதனைத்தொடர்ந்து 2019ல் வேறொரு சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டன. 

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சின்மயானந்தா சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, அவரின் மீதான வழக்கு ஷாஜகான்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், மேற்கூறிய இரண்டு வழக்குகளில் இருந்தும் சின்மயானந்தாவை விடுதலை செய்து உத்தரவிட்டனர்.

முன்னாள் மத்திய உள்துறை இணை அமைச்சர் சுவாமி சின்மயானந்தாவை ஷாஜகான்பூர் நீதிமன்றம் விடுவித்தது. 2011 ஆம் ஆண்டு, அவரது மாணவி சாத்வி அவர் மீது பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டினார். 2019 ஆம் ஆண்டு கூட, சட்ட மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சின்மயானந்த் விடுவிக்கப்பட்டார்.

மாணவியை கட்டாயப்படுத்தி நிர்வாண மசாஜ் செய்ய வைத்த காணொளிகளும் அங்குள்ள சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சி தந்த சூழலில், புகாருக்கு பின் சின்மயானந்தா தலைமறைவானார். அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரின் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. ஆண்டுகள் கழித்து தற்போது இறுதி தீர்ப்பில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதாவது, கடந்த 2011ம் ஆண்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறிய இளம்பெண், தன்னை சின்மயானந்தா கண்டித்ததால் அவரை பழிவாங்கும் நோக்கில் புகார் பதிவு செய்ததாக கூறி வாபஸ் பெற்றுள்ளார். இதனால் அவ்வழக்கில் இருந்து சின்மயானந்தா விடுதலை செய்யப்பட்டுள்ளார். எஞ்சிய வழக்கிலும் அதே நிலைதான்.