இலையை பறிக்க சென்றது குத்தமா?... இளைஞர்களை கட்டிவைத்து வெளுத்தெடுத்த மக்கள்.. பகீர் வீடியோ.!

இலையை பறிக்க சென்றது குத்தமா?... இளைஞர்களை கட்டிவைத்து வெளுத்தெடுத்த மக்கள்.. பகீர் வீடியோ.!


Uttar Pradesh 3 Youngsters Punished by Villagers Police Investigation

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோட்வாலி கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் 3 இளைஞர்கள் மரங்களின் இலைகளை பறித்துக்கொண்டு இருந்துள்ளனர். இந்த மரம் உள்ளூர் மக்களால் பாதுகாக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், உள்ளூர் விவகாரம் தெரியாமல் இளைஞர்கள் சிலர் மரத்தின் இலைகளை பறித்துக்கொண்டு இருந்துள்ளனர். இதனைகவனித்த மக்கள் இளைஞர்களை பிடித்து மரத்தில் கட்டிவைத்து சரமாரியாக அடித்து நொறுக்கியுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ உள்ளூர் ஊடகத்தில் வெளியாகி வைரலாகவே, விஷயம் காவல் துறையினரின் கவனத்திற்கு சென்றுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.