பணியில் சேர்ந்த முதல் நாளே விபரீதம்.. இளம் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை..!

பணியில் சேர்ந்த முதல் நாளே விபரீதம்.. இளம் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை..!


uththarpradesh-nurse-suicide-in-hospital

செவிலியர் ஒருவர் மருத்துவமனைக்கு பணியில் சேர்ந்த முதல் நாளே, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் பகுதியில் வசித்து வந்தவர் ரீனு குமாரி (வயது 23). இவர் செவிலியர் படிப்பை முடித்துவிட்டு, சமீபத்தில் அதே பகுதியில் திறக்கப்பட்ட ஒரு புதிய மருத்துவமனையில் நேற்று செவிலியர் பணிக்காக சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில், மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் அறைக்கு மாலை சென்ற ரீனு நீண்ட நேரமாகியும் வெளியில் வராத நிலையில், சந்தேகமடைந்த சக ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது ரீனு தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக, அவரை மீட்டு பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் அவர் உயிரிழந்தது தெரிய வந்ததையடுத்து, காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளனர்.

uththrapradesh

இந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ரீனுவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் ரீனுவின் பெற்றோர் தனது மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதன் காரணமாக மருத்துவமனை உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்த காவல்துறையினர் பிரேத பரிசோதனையின் முடிவுகள் வெளியான பிறகே, ரீனுவுக்கு என்ன நடந்தது? அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.