சன்னி லியோன் பேன் கார்டை பயன்படுத்தி ரூ.2,000 லோன்.. மோசடி கும்பல் புது ரூட்.. மக்களே உஷார்.!

சன்னி லியோன் பேன் கார்டை பயன்படுத்தி ரூ.2,000 லோன்.. மோசடி கும்பல் புது ரூட்.. மக்களே உஷார்.!



Using Dhani App a Fraud Cheating VIP Pan Card and Getting Loan his Names

இந்தி திரையுலகில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக இருந்து வருபவர் சன்னி லியோன். இவர் ஆபாச படங்களில் நடித்ததன் மூலமாக உலகளவில் அறியப்பட்ட நிலையில், பின்னாளில் பாலிவுட் மற்றும் இந்தி படங்களில் கவர்ச்சி பாடலுக்கு நடனமாடி வைரலாகினார். சில படங்களிலும் நடித்துள்ளார். 

Dhani App

இந்நிலையில், நடிகை சன்னி லியோனின் பேன் கார்டு எண்ணை பயன்படுத்திய மர்ம நபர், DHANI என்ற கடன் வழங்கும் நிறுவனத்திடம் ரூ.2 ஆயிரம் கடன் பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதுகுறித்து, நடிகை சன்னி லியோன் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவலை பகிர்ந்து இருக்கிறார். இதனால் இந்த விஷயம் வெளியுலகத்திற்கு தெரியவந்து, அதனால் பாதிக்கப்பட்ட பலரும் புகார்கள் தெரிவித்துள்ளனர். 

Dhani App

மேலும், DHANI என்ற செயலியின் வாயிலாக, பல்வேறு நண்பர்களின் குறிப்பாக தொழிலதிபர்களின் பேன் கார்டு எண்ணை வைத்து குறைந்தளவிலான தொகைகள் மோசடி முறையில் கடனாக பெறப்பட்டுள்ளது நடந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பலரும் தங்களின் விபரத்தை ட்விட்டாக பதிவு செய்து வருகின்றனர்.