
பயன்படுத்திய முகக்கவசங்களை கொண்டு மெத்தை தயாரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
பயன்படுத்திய முகக்கவசங்களை கொண்டு மெத்தை தயாரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க மக்கள் அனைவரும் முக கவசம் அணிவது காட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுவருகிறது. அதேநேரம் ஒருவர் பயன்படுத்திய முகக்கவசத்தை மற்றொருவர் பயன்படுத்த கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் குசம்பா கிராமத்தில் இயங்கிவரும் மெத்தை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, மக்கள் பயன்படுத்தி தூக்கி வீசிய முகக்கவசங்களை கொண்டு மெத்தை தயாரித்துள்ளது. அவர்கள் தயாரித்த சில மெத்தைகளை பிரித்து பார்த்தபோது உள்ளே ஏகப்பட்ட முகக்கவசங்கள் இருந்துள்ளது.
அதுமட்டும் இல்லாமல், மெத்தை தயாரிக்கும் அந்த நிறுவன வளாகத்தில் ஏகப்பட்ட முகக்கவசங்கள் குவித்துவைக்கப்பட்டிருந்தது. இந்த தகவல் தெரிந்து அதிர்ச்சி அடைந்த போலீசார், வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த முக கவசங்களை கைப்பற்றி தீயிட்டு அழித்தனர்.
மேலும் மெத்தை தயாரிப்பு நிறுவன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement