ரயிலில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்: கண்ணீர் வடித்த அமித் ஷா..!!

ரயிலில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்: கண்ணீர் வடித்த அமித் ஷா..!!


Union Home Minister Amit Shah has expressed his condolences to the families of those who lost their lives in the train fire accident near Madurai

மதுரை அருகே ரயிலில் நடைபெற்ற தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.

மதுரை அருகே சுற்றுலா ரயிலில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திடீரென நடந்த இந்த விபத்து குறித்து முதற்கட்டமாக ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரையில் நடந்த ரயில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்து குறித்து அவர் கூறியதாவது, தமிழகத்திலுள்ள மதுரை அருகே நடந்த பயங்கர ரயில் தீ விபத்து மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

தங்களது அன்புக்குரியவர்களை இழந்து வாடும், அன்னார்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.