ஆசீர்வாதம் பண்ணும்போது கூட... இளையராஜாவை விமர்சித்த நெட்டிசன்! கூலாக விளக்கமளித்த சினேகனின் மனைவி!!
ஓ.. இதுகுத்தன் அடிக்கடி வெளியூர் போறாரா.. பின்னாடியே சென்று பார்த்த மனைவி கண்ட அதிர்ச்சி காட்சி.. வீடியோ..
ஓ.. இதுகுத்தன் அடிக்கடி வெளியூர் போறாரா.. பின்னாடியே சென்று பார்த்த மனைவி கண்ட அதிர்ச்சி காட்சி.. வீடியோ..

இரண்டு மனைவிகளுக்கும் தெரியாமல் தனித்தனியாக குடும்பம் நடத்திவந்த கணவனை இரண்டு மனைவிகளும் சேர்ந்து தர்ம அடி கொடுத்த சம்பவம் வைரலாகிவருகிறது.
ஒடிசா மாநிலம் புபனேஸ்வர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெமுலா பரசுராம். இவர் ஆழ்துளை கிணறு துளையிடும் இயந்திரம் ஒன்றை வைத்தது தொழில் செய்துவந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் தான் ஆழ்துளை கிணறு தோண்டும் வேலைக்காக அடிக்கடி வெளியூர் சென்றுவர வேண்டி இருக்கும் என கூறி, பரசுராம் அடிக்கடி வெளியூர் சென்றுவந்துள்ளார். இதனை கவனித்துவந்த மனைவி நாளுக்கு நாள் கணவரின் நடத்தையில் பல்வேறு மாற்றங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளார். இந்நிலையில்தான் பரசுராம் கடந்த மூன்று மாதங்களாக வெளியூரில் தங்கிவிட்டு சமீபத்தில் வீட்டிற்கு வந்துள்ளார். மேலும் வீட்டிற்கு வந்த சில நாட்களிலையே தான் மீண்டும் வெளியூர் செல்லவேண்டும் என கூறியுள்ளார்.
மனைவியும் அதற்கு சம்மதம் தெரிவித்ததோடு, இந்தமுறை கணவனை பின்தொடர்ந்து அவர் எங்கு செல்கிறார் என நோட்டமிட்டுள்ளார். அப்போது அவர் தெலங்கானா மாநிலம் கம்மாரெட்டி பகுதியில் உள்ள இளம் பெண் ஒருவரின் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
இதுகுறித்து பரசுராமின் முதல் மனைவி அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, பரசுராம்தான் அந்த பெண்ணின் கணவர் என அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த அவர், உடனே அந்த இளம் பெண்ணின் வீட்டிற்குள் சென்று அவரது கணவரை கையும் களவுமகா பிடித்துள்ளார்.
மேலும் அந்த இளம் பெண்ணை அவர் அடிக்க முயன்றபோது, அவர் தனக்கு முதல் திருமணம் குறித்து எதுவும் தெரியாது என கதறி அழுதுள்ளார். இதனை அடுத்து இரண்டு பெண்களுக்கும் சேர்ந்து பரசுராமுக்கு தர்ம அடிகொடுத்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.