மீண்டும் சர்ச்சை.. இந்திய தேசிய கொடியை அவமதித்த அமேசான்..! கடும் கோபத்தில் இந்தியர்கள்.!!

மீண்டும் சர்ச்சை.. இந்திய தேசிய கொடியை அவமதித்த அமேசான்..! கடும் கோபத்தில் இந்தியர்கள்.!!


Twitter Netizens Trend about Amazon Insult Indian National Flag

இந்தியா முழுவதும் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் பிரதான தலமாக அமேசான் உள்ளது. இதன் வாயிலாக மக்கள் தினமும் தங்களுக்கு தேவையான பொருட்களை இணையவழியில் ஆர்டர் செய்து பெற்று வருகின்றனர். 

அவ்வப்போது, அமேசான் நிறுவனம் இந்திய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கடந்த காலங்களில் இந்துக்களின் தெய்வங்களை அவமதித்ததாக சர்ச்சையில் சிக்கி, காந்தி வரை பஞ்சாயத்தை எதிர்கொண்டது. 

twitter

இந்நிலையில், இந்தியாவில் குடியரசு தினம் 26 ஆம் கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்காக சிறப்பு பொருட்கள் விற்பனை என்ற பெயரில் அமேசான் பதிவு செய்துள்ள விற்பனை பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெட்டிசன்கள் அதனை புறக்கணிக்க வேண்டுகோள் வைத்துள்ளனர். 

இந்திய தேசிய கொடி பதித்த டீ-சர்ட், டீ கப், கீ செயின், சாக்லேட் போன்ற பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்தியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் கிளம்பியுள்ளது.