சாகச பயணம் மேற்கொண்ட இளம் பெண் பள்ளத்தில் விழுந்து பலி!

சாகச பயணம் மேற்கொண்ட இளம் பெண் பள்ளத்தில் விழுந்து பலி!Trekking student death in Australia

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் வேமுரு உஜ்வாலா. இவர் தனது நண்பர்களுடன் ஆஸ்திரேலியாவில் பயணம் செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று லாமிங்டன் தேசிய பூங்காவில் உள்ள யான்பாகூச்சி நீர்வீழ்ச்சியில் நடைபயணம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அவரது கேமரா 20 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழவே, அப்போது அவர் அதை எடுக்கும் முயற்சியில் தவறுதலாக பள்ளத்தில் விழுந்தார். இதில் அவர் சமூக இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

australia

இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் 6 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு உஜ்வாலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவரது உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.